Wednesday 21 June 2017

கா‌ய்க‌றி ம‌ஞ்சூ‌ரிய‌ன்

தேவையானவை: 

கேர‌ட் - 1
கோ‌ஸ் - 1 து‌ண்டு
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 2
‌ப‌ ‌மிளகா‌ய் - 2,
பூ‌ண்டு - 4 ப‌ல்லு
சோள மாவு - 4 தே‌க்கர‌ண்டி
எ‌ண்‌ணெ‌ய் - 3 க‌ப்
சோயா சா‌ஸ் - 1தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது, ‌
மிளகு தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்முறை

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு வேக வை‌த்து எடு‌க்கவு‌ம். வெ‌ந்த கா‌ய்க‌றிகளை த‌ண்‌ணீ‌ர் வடி‌த்து எடு‌த்து ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் சோள மாவு, அரை‌த்த ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது, உ‌ப்பு சே‌ர்‌த்து‌ ‌பிசை‌யவு‌ம்.

அதனை ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌, வாண‌லி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி உரு‌ண்டைகளை அ‌தி‌ல் போ‌ட்டு ந‌ன்கு வேக‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

வேறொரு வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடானது‌ம் பூ‌ண்டு ‌விழுது, ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌த் தா‌ள் போ‌ட்டு வத‌க்கவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி உ‌ப்பு, ‌மிளகு தூ‌ள், சோயா சா‌ஸ் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம். இ‌ந்த கரைச‌ல் சு‌ண்டி வரு‌ம் போது வறு‌த்த உரு‌ண்டைகளை‌ப் போ‌ட்டு மெதுவாக ‌கிள‌றி ‌விடவு‌ம். கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.

Tuesday 20 June 2017

வாழை‌ப் பூவை சு‌த்த‌ம் செ‌ய்வது

வாழை‌ப் பூவை த‌ற்போது பலரு‌ம் செ‌ய்வதே இ‌ல்லை. ஏ‌ன் எ‌ன்றா‌ல் அதனை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் முறை ‌மிகவு‌ம் கடின‌ம் எ‌ன்பதா‌ல்.

பலரு‌‌க்கு‌ம் வாழை‌ப் ‌பூவை சு‌த்த‌ம் செ‌ய்வது எ‌ப்படி எ‌ன்றே‌த் தெ‌ரியாது. முத‌லி‌ல் வாழை‌ப் பூ‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஒரு வெ‌ள்ளை நர‌ம்பு போ‌ன்ற ம‌ண்டல‌த்தை‌த் த‌னியாக எடு‌த்து ‌விட வே‌ண்டு‌ம்.

ஒ‌வ்வொரு பூ‌விலு‌ம் இரு‌ந்து இ‌ந்த நர‌ம்பு ம‌ண்டல‌த்தை ‌நீ‌க்கா ‌வி‌ட்டா‌ல், சமை‌த்த ‌பி‌ன் பய‌ங்கரமாக கச‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌விடு‌ம்.

இ‌‌ப்படி நர‌ம்புகளை எடு‌த்து‌வி‌ட்ட ‌பி‌ன் பொடியாக நறு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். ‌இத‌ற்கு ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. பூவை ஆ‌ய்‌ந்து அவ‌ற்றை ‌‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு இர‌ண்டே சு‌ற்று சு‌ற்‌றினா‌ல் போது‌ம். ஒரே அளவாக நறு‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம்.

இ‌னி உ‌ங்க‌ள் ‌‌வீ‌ட்டி‌ல் அ‌வ்வ‌ப்போது வாழை‌ப் பூவை சமை‌த்து சா‌ப்‌பிடு‌வீ‌ர்க‌ள் அ‌ல்லவா?

Thursday 15 June 2017

பருப்புத் துவையல்

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிட இந்த துவையல் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 5 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற விடவும்.
* ஆறவைத்தபொருட்களுடன் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
* சூப்பரான பருப்புத்துவையல் ரெடி.
* இந்த துவையல் பருப்பு சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

Wednesday 14 June 2017

மாங்காய் ஊறுகாய்


செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 8 துண்டுகள்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 கப்


செய்முறை:
முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதனை நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
வேண்டுமெனில் அத்துடன் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!! வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.

Tuesday 13 June 2017

சுக்கு கருப்பட்டி காபி

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 தேக்கரண்டி
கருப்பட்டி – 1 மேஜை கரண்டி

சுக்கு பொடிக்கு…
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்
மல்லி – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – 3 மேஜைக்கரண்டி

செய்முறை:
முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!

Monday 2 January 2017

வீ‌ட்டிலேயே இரு‌க்கு இய‌ற்கையான பேஷிய‌ல்

ஒரு கப் தயிருடன், ஒரு தேக்கரண்டி எலு‌மி‌ச்சை பழச்சாரை கலந்து அதை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் நன்றாக தடவி விடவேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து, மிருதுவான துணியிலோ, காகிதத்தாலோ அதைத் துடைத்துவிட்டு, தண்ணீரால் அலம்பி‌ ‌விட வேண்டும்.

தயிருடன் அரிசி மாவைக் கலந்து, முகத்தில் தடவி பிறகு ஒரு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவிட்டால் முகம் நன்றாகவும் மிருதுவாகவும் ஆகிவிடும்.

தலைமுடியை நன்றாகப் பாதுகாக்கவும் சிறந்த மருந்தாக இருக்கிறது தயிர். மயிர்க்கால்கள் வரை தயிரை நன்றாக தடவி, பிறகு குளித்துவிட்டால் தலைமுடி மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தயிரைத் தலைமுடியில் தடவி, ஒரு அரைமணி நேரம் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. தயிர், தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

வற‌ண்ட சரும‌ம், வற‌ண்ட தலை முடியை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் இ‌ந்த முறையை தாராளமாக‌ச் செ‌ய்யலா‌ம்.

Friday 12 August 2016

வெந்தயத்தின் குணங்களைக் கூறும் சித்த வைத்திய முறைகள்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.